ஆன்லைன் வகுப்புக்கும் விடுமுறையா? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டாலும், கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், 'வாட்ஸ் அப்' மற்றும் பல்வேறு செயலிகள் வழியே வகுப்புகள் நடத்த வேண்டும்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை கவனிக்கும் வகையில், தினமும் பள்ளிகளுக்கு வர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்ற காரணத்தால், ஆசிரியர்களும் பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது. பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு வருகை தருகின்ற்னர். இந்த சூழலில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் நாளை ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வரும் ஜனவரி 22 ஆம் தேதி, சனிக்கிழமை (நாளை) ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மாணவர்களின்றி பள்ளிகள் செயல்படுவதால் வருகிற ஜனவரி 22 - சனிக்கிழமை (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment