பீதியில் உறைந்த மக்கள்; அசுர வேகம் எடுத்த கொரோனா!
கொரோனா எடுத்துள்ள அசுர வேகத்தை பார்த்து மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். இதனால் அடுத்தடுத்து என்ன நடக்குமோ? என பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் நேற்று 580 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 639 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று 3579 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பூரண குணமடைந்து 487 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் தற்போது 3731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும் இன்று கொரோனாவுக்கு பலி எதுவும் இல்லை என்றாலும் அசுர வேகத்தில் தொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவது, பொதுமக்களிடையே கவலையையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment