தந்தையை கட்டிபிடித்தபடி மகள்கள் சடலம்... மறைமலை நகர் அருகே துயர சம்பவம்
மறைமலை நகர் அருகே தந்தை மகள்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுநர் இருமகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்ட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல் ( வயது-44) இவர் மனைவி ஜெயந்தி ( வயது-38) மற்றும் இவர்களுக்கு 5,3 வயதில் இரு மகள்கள் இருந்தனர்.
ஞானவேல் கடந்த 15 ம் தேதி முதல் இருமகள்களுடன் ஆட்டோவில் சென்ற நிலையில் அவர் மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலைத்தில் நேற்று 18ம் தேதி காணவில்லை என புகார் அளித்தார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது அருகேயுள்ள உள்ள விவசாய கிணற்றில் 2 சிறுமிகள் மற்றும் ஒரு நபர் சடலமாக மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததை அடுத்து பிரேதங்களை மீட்டு விசாரணை செய்ததில்
அது எழும்பூரில் காணாமல் போன ஞானவேல் மற்றும் மகள்கள் என தெரிய வந்தது.
தந்தை ஞானவேலுடன் மகள்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment