முடிவுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 20, 2022

முடிவுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

முடிவுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி!


கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
உலகம் முழுவதும் கொரோனா, அதன் திரிபான ஒமைக்ரான் படுவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அந்நாட்டில் ஒமைக்ரான் பரவலும் அதிகமாக உள்ளது. இதனால், அங்கு பலவிதமாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. ‘ப்ளான் ஏ’ வில் இருந்து ‘ப்ளான் பி’ எனும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அதேசமயம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அங்கு விரைவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் எனவும், என ‘ப்ளான் பி’க்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்ததால், ‘ப்ளான் ஏ’விற்கு மீண்டும் நாடு திரும்புவதாகவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், “இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்புகளும் தற்போது குறைந்து வருகிறது. நம்முடைய சமூகத்தில் பெரும்பாலானோருக்கு புஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதால், கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் வியாழக்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படும். பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதன் பலனாக இது சாத்தியமாகி இருக்கிறது. ‘ப்ளான் பி’ விதிமுறைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பின்பற்றியதால், மீண்டும் ‘ப்ளான் ஏ’ விதிமுறைகளுக்கு திரும்பலாம். ‘ப்ளான் பி’ விதிமுறைகள் அடுத்தவாரம் காலாவதியாகும்.” என்றார்.

இங்கிலாந்தில் இதுவரை 36 மில்லியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீதம் பேருக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு தொடரும் என்றும், வரும் மார்ச் மாதம் காலாவதியாகும் இச்சட்டம் விரைவில் நீக்கப்படும் எனவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஓமைக்ரான் அலை தற்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக நமது விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அனைத்து எச்சரிக்கையான நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது. கொரோனா எல்லா நோய்களையும் போல சமூகத்தில் இருக்கும். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்.” என்றும் தெரிவித்தார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த அறிவிப்பு மூலம், இங்கிலாந்தில் மக்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை. விருப்பப்படுபவர்கள் அணிந்து கொள்ளலாம். முகக்கவசம் அணியவில்லை என்றால் அது குற்றமாகாது. பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் அணிவதில் இருந்து நாளையே விலக்களிக்கப்படும். ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையில்லை. இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கொரோனா பாஸ்கள் இனி தேவையில்லை. கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களும் இனி தேவைப்படாது. வணிக நிறுவனங்கள் விரும்பினால் கொரோனா பாஸ்களை தொடரலாம். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா ஒமைக்ரான் அலைகள் வேகமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பிரதமர் இல்லத்தில் கொரோனா விதிகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய விவகாரம் அந்நாட்டில் பூதாகரமானது. ஐந்து வயது சிறுமி ஒருவர் கூட இந்த விவகாரத்தை பற்றி பேசியது வைரலானது நினைவிருக்கலாம். இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் பதவியை இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad