விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக வழக்கு: கோர்ட் உத்தரவால் தப்பித்த கொளத்தூர் மணி!
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் பேசியதாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சாட்சிகளுடைய வாக்குமூலங்களில் போதிய முகாந்திரம் இல்லை என்றும் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இருவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment