யாரையும், எதையும் எளிதில் மன்னிக்காத 4 ராசிகள்
மன்னிப்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பது பெரிய மனிதன் என்பார்கள். அதையே மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் தெரிந்த மனிதன் வாழ்நாளில் ஒரு போதும் ஒருவர் மீது வெறுப்பு கொள்ள மாட்டான்.
மன்னிப்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பது பெரிய மனிதன் என்பார்கள். அதையே மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள்.
இப்படி வாழ்வில் பெரும்பாலும் சரியான விஷயங்களை சரியாக செயது விடுவது வழக்கம். ஆனால் சில விஷயங்களை நாம் செய்யும் போது, சிலருக்கு அது பிரச்னை தருவதாக இருக்கும். தான் செய்யக்கூடிய விஷயத்தால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டதாக நாம் அறிந்தாலே அதை நாம் சரிசெய்வதற்கு முயல வேண்டும்.
எந்த ஒரு பெரிய தவறும், மன வருத்தமும், நாம் மன்னிப்பு கேட்பதால் அது சரியாகி விடும். ஒருவருக்கு மன்னிக்கக்கூடிய குணம் இருப்பது ஒரு பெரிய வரம் என்றே கூறலாம்.
மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் தெரிந்த மனிதன் வாழ்நாளில் ஒரு போதும் ஒருவர் மீது வெறுப்பு கொள்ள மாட்டான். அவருக்கு எளிமையான, சிக்கலற்ற மற்றும் நிம்மதியான வாழ்க்கை வரமாக பெற்றிருப்பார்.
மறுபுறம் மன்னிக்கத் தெரியாதவர் கசப்பான, இழிவானவராகவும், முட்டாள்தனமானவராகவும் மாறுகிறார்.
இங்கு மன்னிக்கத் தெரியாத குணம் உடைய ராசியினர் யார் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் தைரியம், ஆற்றல் தரக்கூடியவர் என்றாலும் கோபம், உணர்ச்சிவசப்படக்கூடிய குணத்தையும் கொடுப்பவர்.
இவர்களுக்கு நியாயமாக நடந்து கொள்வதும், சரியான நேரத்தில் அனைத்தும் நடக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மட்டும் பழகுவார்கள். அப்படி இல்லையெனில் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்போதும் மன்னிக்காததோடு, அடுத்து அவர்களை அருகில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.
கடகம்
மனோகாரகன் எனும் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் தங்கள் குடும்பத்தைப் புண்படுத்தியவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். இவர்கள் அதிகம் உறவு பிணைப்பில் இருக்கக்கூடியவர்கள். அதனால் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் இணைந்திருப்பார்கள்.
யார் ஒருவர் தங்கள் குடும்பத்தினருக்கு துரோகம் செய்தால் அல்லது பழிவாங்க நினைத்தால் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்
செவ்வாய் ஆளக்கூடிய மற்றொரு ராசியான விருச்சிக ராசியினர் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். யாரேனும் ஒருவர் தங்கள் உணர்வுகளுடன் விளையாடினால் அல்லது தீங்கு செய்ய நினைத்தால் அந்த நபரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பொதுவாகவே தங்கள் செயல்பாடுகளை எப்போதும் ரகசியமாக வைத்திருக்கும் விருச்சிக ராசியினர், அவர்களுக்கு தீங்கு செய்தவர்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு மறந்து விடாமல் பழிவாங்குவார்கள். கசப்பான மனநிலை கொண்டவர்கள்.
மகரம்
சனி பகவான் ஆளக்கூடிய மகர ராசிக்காரர்களே சிக்கலற்றவர்கள் மற்றும் எளிமையானவர்கள் என்பதால், இவர்களிடம் பழகுபவர்கள் யாரேனும் இரட்டை வேடம் போடுபவர்களாக இருந்தால் அல்லது வெறுப்புடன் பழகுபவர்களாக இருந்தால், மனம் காயப்படும் வகையில் நடந்து கொண்டால் அவர்களால் மன்னிக்க முடியாது. யாரேனும் ஒருவகையில் ஏமாற்றப்பட்டாலோ, துரோகம் செய்தாலோ அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment