சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேரப் போகிறார்களா?
நாக சைதன்யா அளித்த பேட்டியை பார்த்த தெலுங்கு ரசிகர்களோ, சமந்தா மீண்டும் தன் கணவருடன் சேர்ந்துவிடுவார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள்.
சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார்கள்.
விவாகரத்து அறிவிப்பு வெளியிடும் முன்பே நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்துவிட்டார்களாம். சமந்தாவை விட்டுவிட்டு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார் நாக சைதன்யா.
நாக சைதன்யா, சமந்தாவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்த்து வைக்குமாறு தெலுங்கு சினிமா ரசிகர்கள் நாகர்ஜுனாவிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
சமந்தா எங்கள் குடும்பத்தை விட்டுச் சென்றாலும் என்றுமே என் மகள் தான் என நாகர்ஜுனா கூறியது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் என நாக சைதன்யா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமந்தாவின் சந்தோஷம் தான் தனக்கும் சந்தோஷம் என்றார். இதை எல்லாம் வைத்து நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் படுபிசியாகிவிட்டார் சமந்தா. அவர் நாக சைதன்யா பற்றி பேசுவதே இல்லை. தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளிங், ஜாகிங் செல்வது என்று தன்னை பிசியாக வைத்திருக்கிறார் சமந்தா.
No comments:
Post a Comment