ஏடிஎம்மில் புகுந்த பாம்பு... தலைத்தெறித்து ஓடிய இளைஞர்!
ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற இளைஞர், அங்கு பாம்பு புகுந்திருந்ததை கண்டு தலைத்தெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே அமைந்துள்ள கைபமங்கலம் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு இளைஞர் ஒருவர் பணம் எடுக்க இந்த மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் பி்ன்புறம் ஏதோ ஓடுலது போன்ற சலசலப்பு சப்தம் கேட்டுள்ளது.
இயந்திரத்தின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு 4 அடி நீள நாகபாம்பு ஏடிஎம்மில் பதுங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.
இரவு நேரத்தில் இளைஞரி்ன் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சிலர் ஏடிஎம் மையத்துக்கு புகுந்து பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களின் பிடியில் நாகபாம்பு சிக்காமல் போக்குக்காட்டி கொண்டிருந்தது.
இதையடுத்து கையமங்கலம் போலீசாருக்கும், வனத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த இடத்துக்கு வந்த வனத்துறையினர். ஏடிஎம்மில் போக்குக்காட்டி கொண்டிருந்த நாகபாம்பை சில நிமிடத்தில் லாவகமாக பிடித்தனர்.
பிடித்த பாம்பை அருகிலிருக்குமம் வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்றுவிட்டனர். ஏடிஎம்மில் மையத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment