சோகத்தில் இருக்கும் நடிகர் ரஜினிக்கு ஒரு குட் நியூஸ்..!யாரும் எதிர்பார்க்காத விஷயம்பா இது..!
சன் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் TRPயில் சாதனைப்படைத்துள்ளது
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் புரிந்த சாதனைகளை நாம் பட்டியலிடவே முடியாது. அந்த அளவிற்கு அவரின் சாதனைப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 70 வயது நெருங்கியும் இன்னும் ஓர் இளைஞனாக உழைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினி. இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகமான ரஜினி படிப்படியாக உயர்ந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார்.
கிட்ட தட்ட நாற்பது ஆண்டுகளாக அந்த பட்டத்தை தக்கவைத்திருக்கிறார் ரஜினி. அவர் நடித்த படங்களில் தோல்வி படங்கள் என்றால் நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தன் ரசிகர்கள் ரசிக்கவேண்டும் என உழைத்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினி தற்போது தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் விவாகரத்தினால் மனவருத்ததில் இருக்கிறார். அதன் காரணமாக திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை சமூகத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ரஜினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்த. என்னதான் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அண்ணாத்த திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது. இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு அண்ணாத்த படம் சன் டிவி யில் ஒளிபரப்பப்பட்டது. முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணாத்த திரைப்படம் TRPயில் சாதனைப்படைத்துள்ளது.21 .60 trp புள்ளிகளைப்பெற்று சாதனைபடைத்தது அண்ணாத்த திரைப்படம்.
விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர், அஜித்தின் விசுவாசம் போன்ற படங்களின் சாதனையை முறியடித்துள்ளது அண்ணாத்த திரைப்படம். இதனால் ரஜினியின் ரசிகர்கள் சற்று ஆறுதலாக இருக்கின்றனர். எங்கள் தலைவருக்கு இன்னும் வயசாகலா இன்னும் எத்தனை காலம் கடந்தாலும் அவரது ரசிகர்கூட்டம் அதிகரித்த வண்ணமே இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment