youtube premium india: யூடியூப் வருடாந்திர சந்தா திட்டம் இந்தியாவில் அறிமுகம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 20, 2022

youtube premium india: யூடியூப் வருடாந்திர சந்தா திட்டம் இந்தியாவில் அறிமுகம்

youtube premium india: யூடியூப் வருடாந்திர சந்தா திட்டம் இந்தியாவில் அறிமுகம்


கூகுள் நிறுவனம் யூடியூப் பிரீமியம், யூடியூப் மியூசிக் பிரீமியத்திற்கான வருடாந்திர சந்தா திட்டங்களை திட்டங்களை இந்தியாவில் அறிமுகபடுத்தியது.
கூகுள் இறுதியாக இந்தியாவில் யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியத்திற்கான வருடாந்திரத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 12 மாத தொடர் சந்தாவிற்கு முன்பணம் செலுத்தலாம்.

முன்னதாக அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, பிரேசில், ரஷ்யா, துருக்கி, ஜெர்மனி, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. யூடியூப் பிரீமியத்திற்கான கட்டணச் சந்தா மாதாந்திரம், காலாண்டு அடிப்படையில் வழங்கத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து ஆண்டு சந்தா கொண்டுவரப்பட்டுள்ளது.
அறிமுகச் சலுகையாக, கூகுள் தற்போது ஜனவரி 23 வரை தள்ளுபடி விலைகளை அறிவித்துள்ளது. யூடியூப் பிரீமியத்திற்கான வருடாந்திர சந்தா ரூ.1,159ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் மியூசிக் பிரீமியத்தை ₹889க்கும் பயனர்கள் பெறலாம்.
பயனர்கள் தங்களின் தற்போதைய சந்தாவை ரத்துசெய்து, புதியதாக பதிவு செய்வதன் மூலம் வருடாந்திர பிரீமியம் திட்டத்திற்கு மாற முடியும். கூடுதலாக, ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியானதும் ப்ரீபெய்டு பயனர்கள் தானாக வருடாந்திர திட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள். புதிய திட்டங்களுக்கான கட்டணம் ப்ரீபெய்ட் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதை திரும்பப் பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

YouTube பிரீமியம் வருடாந்திரத் திட்டங்களில் ஸ்மார்ட்போன், இணையம் ஆகிய இரண்டு அணுகல்களும் பயனர்களுக்கு கிடைக்கும். இருப்பினும், நிறுவனம் இன்னும் iOS ஸ்மார்ட்போன்களுக்கான சந்தா விவரங்களை வெளியிடவில்லை.

கூகுள் இதுவரை யூடியூப் பிரீமியத்திற்கு மாதம் ரூ.129 வசூலித்து வந்தது. ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கூட்டுக் கணக்கை அனுமதிக்கும் குடும்பத் திட்டத்திற்கு மாதம் ரூ. 189 செலவாகும். மாணவர்கள் மாதத்திற்கு ரூ. 79 மட்டும் செலுத்தி மாதாந்திர சந்தாவைப் பெறலாம்.

யூடியூப் மியூசிக் பிரீமியம் மாத சந்தா ரூ. 99 முதல் தொடங்குகிறது. குடும்பத் திட்டம் மாதத்திற்கு ரூ. 149ஆக உள்ளது. மாணவர்களுக்கான மாதாந்திர சந்தா மாதத்திற்கு ரூ. 59ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad