ஒரே நாளில் பாரதியிடம் ஏற்பட்ட மாற்றம்: இன்ப அதிர்ச்சியில் கண்ணம்மா!
பாரதி கண்ணம்மாவில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
பாரதியிடம் சண்டை போட்டு விட்டு மயங்கிவிடும் கண்ணம்மா மறுநாள் விடிந்ததும் எழுந்து காபி போட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது பாரதி, கண்ணம்மா எடுத்துக் கொடுத்த பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து நிற்கிறான். அவனுக்கு காபி கொடுத்து என்ன கிளம்பிட்டீங்களா என கேட்கிறாள் கண்ணம்மா. அதற்கு நான் கிளம்பிட்டேன் நீதான் இன்னும் கிளம்பாம இருக்க என பாரதி சொல்கிறான்.
உடனே எங்கே என கண்ணம்மா கேட்க, ஃபங்ஷனுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும் என சொல்கிறான். கண்ணம்மா கனவா நிஜமா என யோசிக்க, அப்படி இருந்தாலும் நம்ப மாற்ற இப்படி இருந்தாலும் நம்ப மாற்ற. ஒரு புருஷனா இருக்கிறது ரொம்ப கஷ்டம் என கூறுகிறான். பிறகு கண்ணம்மா ஒரு பத்து நிமிஷம் குளிச்சுட்டு ரெடி ஆகிட்டு வரேன் என கூறிவிட்டு உள்ளே செல்கிறாள்.
அதன்பின்னர் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு அங்கு அமர்கின்றனர். நடப்பதெல்லாம் கனவா நிஜமா என யோசிக்கும் கண்ணம்மா, பாரதியிடமே கேட்டு விடுகிறாள். உனக்கு புடிச்சிருக்கா இல்லையா என அவன் கேட்க ரொம்ப பிடிச்சிருக்கு என கண்ணம்மா சொல்கிறாள். அதன்பின்னர் கோவிலுக்கு டொனேஷன் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்புகிறான்.
இந்தப் பக்கம் குழந்தைகள் இருவரையும் பார்க்கிற்கு ஒரு வழியாக அனுப்பி வைத்துவிட்டு பாரதி கண்ணம்மாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். சௌந்தர்யா ஒரே பதற்றத்தோடு இருக்கிறாள். நான் ஒருமுறை வெளியே போய் பார்த்துட்டு வந்து விடுகிறேன் என அவள் வெளியே வர அவருடன் சேர்ந்து எல்லோரும் வெளியே வருகின்றனர்.
அப்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக காரில் வந்து இறங்குகின்றனர். பாரதி கண்ணம்மாவின் கையை பிடித்து கூட்டி வருகிறான். இந்த ஆச்சரியத்தை நம்பமுடியாமல் அனைவரும் பார்க்கின்றனர். இருவரும் ஒன்றாக ஜோடியாக வருவதைப் பார்த்து சௌந்தர்யா உற்சாகம் அடைகிறாள். என்னடா ஆளே மாறிட்டா என கேட்கிறாள் சௌந்தர்யா. அதன்பின்னர் அஞ்சலியை அழைத்து ஆரத்தி எடுக்க சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment