தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா - சென்னையில் அடங்காத பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 3, 2022

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா - சென்னையில் அடங்காத பாதிப்பு!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா - சென்னையில் அடங்காத பாதிப்பு!



Samayam Tamil
செய்திகள்
தமிழ்நாடு
புதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact Checkவர்த்தகம்ஆட்டோமொபைல்ஸ்ஸ்போர்ட்ஸ்லைப்ஃஸ்டைல்என்.ஆர்.ஐநாகப்பட்டினம்மழை - அரசின் செயல்பாடு


தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா - சென்னையில் அடங்காத பாதிப்பு!
Velayuthan Murali | Samayam Tamil | Updated: 3 Jan 2022, 8:39 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது
ஹைலைட்ஸ்:
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா
சென்னையில் அடங்காத பாதிப்பு!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்


சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில், 1,728 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வெளி நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட இன்று புதிதாக, 1,728 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 1,012 பேர் ஆண்கள். 710 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 ஆக அதிகரித்து உள்ளது.
தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 876 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 158 பேருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 776 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 876 ஆக அதிகரித்து உள்ளது. கோவை மாவட்டத்தில், நேற்று 80 ஆக இருந்த பாதிப்பு, இன்று 105 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் தனியார் மருத்துவமனைகளிலும், 54 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 796 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று மட்டும் 662 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 5 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்து 364 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 121 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 100 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கொரோனா தினசரி பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட அதிகமாகி உள்ளது. தலைநகர் சென்னையிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Post Top Ad