கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆன கேடிகள்… ஒரு மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆன கேடிகள்… ஒரு மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன?

கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆன கேடிகள்… ஒரு மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன?


சிப்காட் போலீசார் கொலை சம்பவம் நடந்த பகுதியிலிருந்து சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் லொகேஷனை வைத்து தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தினர்.தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (39). கட்டடத் தொழிலாளியான இவர், சிண்ணக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் திடீரென அரிவாளால் செல்வராஜை சரமாரியாக வெட்டியதாக சொல்லப்படுகிறது.

அதை தடுக்க முயன்ற மாடசாமி (54) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் நின்றவர்கள் கூச்சலிட்டதால் நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்ட இருவரையும் அந்தப் பகுதி மக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், இருப்பினும் வழியிலேயே செல்வராஜ் உயிரிழந்தார். காயமடைந்த மாடசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கொலையாளிகளை விரைந்து பிடிக்க சிப்காட் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சிப்காட் போலீசார் கொலை சம்பவம் நடந்த பகுதியிலிருந்து சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் லொகேஷனை வைத்து தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தூத்துக்குடி வாடிதெருவைச் சேர்ந்த உதயமூர்த்தி (22), ராபின் (26), நடராஜர்புரத்தைச் சேர்ந்த கண்ணன் (22) ஆகிய மூன்று பேரையும் ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவான வினோத் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் மாநகரில் உள்ள பல்வேறு மதுபான பார்களுக்கு சென்று உதயமூர்த்தி, ராபின், கண்ணன், வினோத், ஆகிய நான்கு பேரும் மது கேட்டதாகவும், சிண்ணக்கண்ணுபுரம் மது பாரில் உள்ள பார் ஊழியர் ராஜாவிடம் மது கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாருக்கு சென்று அங்கு இருந்த பார் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களிடமிருந்த மது பாட்டில் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு சென்று மது அருந்தி உள்ளனர்.மது போதையில் தன்னிடம் தகராறு செய்த ராஜா ஞாபகம் வர அங்கிருந்து சின்னகண்ணுபுரம் பாருக்கு வந்த நான்கு பேரும் அங்கிருந்த ஊழியரை தாக்குவதற்கு பதிலாக, செல்வராஜை அரிவாளால் வெட்டியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் கொலை குற்றவாளிகளை பிடித்த சிப்காட் போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad