ராகுல் காந்தியுடன் சண்டை போட்டேன்.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 18, 2022

ராகுல் காந்தியுடன் சண்டை போட்டேன்.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா

ராகுல் காந்தியுடன் சண்டை போட்டேன்.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா



சிறு வயதில் ராகுல் காந்தியுடன் நிறைய சண்டை போட்டதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முகமாக முன்னிறுத்தப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பிரியங்கா காந்தி லைவ் வீடியோவில் கலந்துரையாடினார். அப்போது அவர் குழந்தைப் பருவத்தில் தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் நிறைய சண்டை போட்டுள்ளதாக கூறினார்.

கலந்துரையாடலில் பேசிய பிரியங்கா காந்தி, “என் பாட்டி கொலைசெய்யப்பட்ட பிறகு நான் வீட்டில் இருந்தே கல்வி பயின்றேன். அந்த சூழலில் அதிகம் தனிமையில்தான் இருந்தேன். அந்த காலத்தில் நானும் ராகுல் காந்தியும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். அதேபோல நட்பாகவும் இருந்திருக்கிறோம்.எங்கள் குடும்பத்தில் மிக ஆழமான ஜனநாயகம் இருந்தது. மிக சிறிய விஷயங்களில் கூட குடும்பத்தில் அனைவரும் சேர்ந்துதான் முடிவெடுப்போம். இப்போது எனது குழந்தைகளின் படிப்பு விஷயங்களில் உதவி கேட்கும்போது அவர்களின் நண்பர்களுக்கும் சேர்த்தே உதவுகின்றேன்” என்று கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad