போர் நினைவிடத்தில் ஹெல்மெட் திருட்டு... தலைமைச்செயலகம் அருகே நிகழ்ந்த சோகச் செயல்!
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் துப்பாக்கி மீது வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமைச்செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது. இங்கு போர்வீரர் நினைவு தூண்கள் அமைக்கப்பட்டு நடுவில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி இருக்கும்.
அந்த துப்பாக்கியின் மேல் இரும்பு ஹெல்மெட் ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஹெல்மெட் திடீரென மாயமாகி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நினைவு தூணில் இருந்த இரும்பு ஹெல்மேட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஹெல்மெட்டை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். தற்போதுஅதேபோல் மீண்டும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தலைமை செயலகத்தில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதன் எதிரே இப்படி வரலாற்று நினைவிடத்தில் திருட்டு அரங்கேறி உள்ள சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment