அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது - மாநில அரசு இப்படியொரு ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது - மாநில அரசு இப்படியொரு ஷாக்!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது - மாநில அரசு இப்படியொரு ஷாக்!


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து குழப்பம் அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டாலும், அது குறித்து அரசாணை வெளியிடப்படாததால் அரசு ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு 11வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதே போல், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரித்தும் மாநில அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஆந்திர மாநில அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய அறிவிப்பை திரும்பப் பெற்று பழைய ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என, ஆந்திர மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்ட அறிவிப்புக்கான அரசாணையை ஆந்திர மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை. இதன் காரணமாக, இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ள அரசு ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


இது தொடர்பாக, நாளையுடன் ஓய்வு பெற உள்ள 60 வயதாகும் அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், "என்னுடைய பணிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஒரே குழப்பமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா என்று உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு, இல்லை" என்று தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த மாத இறுதியில் 60 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு பிரமாண்டமான பிரியாவிடை விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad