மதுரை அவனியாபுரம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து; அப்டேட்!
மதுரை அருகே பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
மதுரை அவனியாபுரம் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக். இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனியை நடத்தி வருகிறார். இன்று மதியம் அந்த குடோனில் இருந்து அதிகமாகப் புகை வெளியேறி உள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தீப்பிடித்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வாகனங்கள் 2 சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பஞ்சு மெத்தை கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலங்கார ஊர்தியை வரவேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
மேலும் குடோனில் இருந்த சோபா மெத்தை என அனைத்து பொருட்களும் பஞ்சு மூலம் செய்யப்பட்டதால் எளிதாக தீ பரவியதோடு மொத்தமாக தீயில் கருகி நாசமானது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தீ விபத்திற்கு காரணம் மின்கசிவ அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனியாபுரம் ஊருக்குள் இருந்த பஞ்சு குடோவுனில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment