கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருள் பெட்டகம்... பெண்கள் உயிரோடும் விளையாடும் அரசு!
திருப்பூர் அரசு சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.
மேலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பில், சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது. அதில் ஊட்டச்சத்து மாவு 1 கிலோ, இரும்புச் சத்து திரவம் 200 மி.லி - 3, உலர் பேரிச்சை 1 கிலோ, புரதச்சத்து பிஸ்கேட் 500 கிராம், ஆவின் நெய் 500 கிராம், அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை - 3 மற்றும் துண்டு ஒன்று வழங்கப்படுகிறது. இதன் மதிப்பீடு 2,000 ரூபாய் என அரசு கணக்கிட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில், பேரிச்சை காலாவதியாகி ஒரு மாதமாகிறது. அதேபோல், ஆவின் நெய் இன்னும் ஒரு நாளில் காலவதியாக இருக்கிறது. விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் நடிகை பூர்ணா ..திரண்ட மக்கள்!
எனவே, அலட்சியமாக இருக்காமல், இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனத்தின் மூலம் வேறு எங்கெங்கு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விசாரித்து தடுத்து நிறுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment