பாஜக வேட்பாளர்கள் யார், யார்? உ.பி., லிஸ்டை கையிலெடுத்த மோடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

பாஜக வேட்பாளர்கள் யார், யார்? உ.பி., லிஸ்டை கையிலெடுத்த மோடி!

பாஜக வேட்பாளர்கள் யார், யார்? உ.பி., லிஸ்டை கையிலெடுத்த மோடி!


சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
வரும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசமும் அடங்கும். தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால், இங்கு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் இன்று காலை கூடியுள்ளது.

இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் ஷர்மா, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜகவின் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், பாஜக உத்தரப் பிரதேச பொது செயலாளர் (அமைப்பு) சுனில் பன்சால்,
தேசிய பொது செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார், யார் என தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017 தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்கள் ஒருவர் கூட இல்லாத சூழலில், இம்முறை குறைந்தது 20 முஸ்லீம் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சி தலைமைக்கு பாஜக மைனாரிட்டி மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் பட்டியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதால் ஒவ்வொரு கட்டமாக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதில் அயோத்தி தொகுதியில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இவரது பெயர் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

இதையடுத்து பிப்ரவரி 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்தல் நெருங்கவுள்ள சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நரேஷ் சைனி (பேகத்), ஹரி ஓம் யாதவ் (சிர்சாகஞ்ச்), முன்னாள் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ தர்ம்பால் சிங் ஆகியோர் கடந்த புதன் அன்று பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பாஜகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் 312 இடங்களை கைப்பற்றி பாஜக புதிய வரலாறு படைத்திருந்தது. 39.67 சதவீத வாக்குகளை பெற்றது. இதேபோன்ற வெற்றியை மீண்டும் பெற அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad