‘கொஞ்சமாவது நியாயமா இருங்க’…மூன்றாவது நடுவரை பங்கம் செய்த கோலி-அஸ்வின்...ரசிகர்கள் கொந்தளிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

‘கொஞ்சமாவது நியாயமா இருங்க’…மூன்றாவது நடுவரை பங்கம் செய்த கோலி-அஸ்வின்...ரசிகர்கள் கொந்தளிப்பு!

‘கொஞ்சமாவது நியாயமா இருங்க’…மூன்றாவது நடுவரை பங்கம் செய்த கோலி-அஸ்வின்...ரசிகர்கள் கொந்தளிப்பு!


மூன்றாவது நடுவர் வெளியிட்ட தீர்ப்புக்கு கோலி, அஸ்வின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற 212 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஓபனர் எய்டன் மார்க்கரம் 16 ரன்கள் மட்டும் அடித்து நடையைக் கட்டினார். இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு துவக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி அடுத்த விக்கெட்டை எடுக்க, இந்திய அணி கடுமையாக போராடியது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டீன் எல்கர் 22 ரன்கள் எடுத்திருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்து எல்கரின் பேடில் பட்டது.
அதிர்ச்சி தீர்ப்பு:

நடுவரும் அவுட் வழங்கினார். பந்து மிகவும் தாழ்வாக வந்து பேடில் பட்டதால், எல்கர் ரிவியூ செல்ல மாட்டார் என்றுதான் கருதப்பட்டது. இருப்பினும், அதிர்ச்சியளிக்கும் வகையில் ரிவியூ சென்றார். இதனையெடுத்து, டிஆர்சில் பந்து ஸ்டெம்பிற்கு மேலே செல்வதுபோல் காண்பிக்கப்பட்டு, நாட் அவுட் வழங்கப்பட்டது. உண்மையில் பந்து அவ்வளவு பவுன்சர் ஆக வாய்ப்பில்லை. கிட்டதட்ட 120+ வேகத்தில் பந்துவீசியிருந்தால்தான், அப்படி பவுன்சர் ஆகியிருக்கும்.இதனால், அதிருப்தியடைந்த பந்துவீச்சாளர் அஸ்வின், கோலி இருவரும் ஸ்டெம்ப் மைக் இருக்கும் இடத்திற்கு சென்று, மூன்றாவது நடுவரை விமர்சனம் செய்து பேசினார்கள்.
கோலி, அஸ்வின் பேச்சு:

முதலில் அஸ்வின் பேசும்போது, ‘‘இதுபோன்ற பெரிய போட்டியில் வெல்ல வேண்டும் என்றால், வேறு நல்ல வழியை பாருங்கள்’’ எனத் தெரிவித்தார். அடுத்து கோலி பேசியபோது, ‘‘உங்கள் அணியினர் அவ்வபோது பந்துகளை சேதப்படுத்துகின்றனர். அதையும் பாருங்கள். எதிரணியை மட்டும் பார்க்க வேண்டாம். எப்போதும் அனைத்தையும் நியாயமான முறையில் பாருங்கள்’’ எனக் கூறினார்.எல்கருக்கு இந்த அவுட் கொடுக்காததால், ஆட்டம் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியது. ஆம், எல்கர் மற்றும் பீட்டர்சன் இருவரும் சிறப்பான முறையில் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், மூன்றாவது நாளின் கடைசி ஓவரில் எல்கர் எட்ஜ் கொடுத்த நிலையில், அதனை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். இதற்கு நடுவர் நாட்அவுட் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நடுவரிடம் முறையிடப்பட்ட நிலையில், எல்கர் 30 (96) அவுட் எனத் தெரிய வந்தது.
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி தற்போதுவரை 101/2 ரன்கள் எடுத்து, 111 ரன்கள் பின்தங்கியுள்ளது. பீட்டர்சன் 48 (61) களத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad