பாஜகவிற்கு பெரிய ஷாக்; மொத்தமாக உருவப் போகும் அதிமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

பாஜகவிற்கு பெரிய ஷாக்; மொத்தமாக உருவப் போகும் அதிமுக!

பாஜகவிற்கு பெரிய ஷாக்; மொத்தமாக உருவப் போகும் அதிமுக!


அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் கோட்டையை தகர்க்க அதிமுக செய்து வரும் வேலைகளால் களம் சூடுபிடித்துள்ளது.
தென் மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி. நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், நயினார் நாகேந்திரன் என பல அமைச்சர்களையும், அ.லெ.சுப்பிரமணியன் போன்ற முக்கியமான தலைவர்களையும் தமிழகத்திற்கு அளித்துள்ளது. இங்கு தலித் மக்களின் வாக்கு வங்கி அதிக அளவில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பிள்ளைமார், தேவர், யாதவர், நாடார், இஸ்லாமியர் உள்ளிட்டோரின் வாக்குகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் நடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 3, அதிமுக கூட்டணி 2 என வெற்றி பெற்றன. திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் (பாஜக), அம்பாசமுத்திரம் தொகுதியில் இ.சுபயா (அதிமுக), பாளையங்கோட்டை தொகுதியில் எம்.அப்துல் வாகப் (திமுக), நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ராதாபுரம் தொகுதியில் எம்.அப்பாவு (திமுக) ஆகியோர் எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர்.


பாஜக தனது கட்சியை பலப்படுத்தி தனிப்பெரும் சக்தியாக வளர்வதற்கு வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதற்கு அடித்தளமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். அடுத்தகட்டமாக உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி பலத்தை கூட்ட மும்முரம் காட்டி வருகிறது. அதற்கு தாங்கள் வெற்றி பெற்ற 4 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அதுசார்ந்த மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் போட்டியிடுவது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே அதிமுக உடன் கூட்டணி வைத்து பயணித்து வருகிறது. மக்களவை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் என இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு என அதிரடி காட்டி வருகின்றன. இம்முறை அதிமுக கூட்டணியில் பெருவாரியான இடங்களை பெற்று வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது.
ஆனால் திசையன்விளை பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அதிமுகவே போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் வெளிப்படையாகவே பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திமுகவை வீழ்த்த தனித்து களம் காண்பதே சரி. பாஜக உடன் கைகோர்த்தால் பின்னடைவாக அமைந்துவிடும் என்று திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் கருதுகின்றனராம்.

இந்த விஷயத்தில் கட்சி தலைமையிடம் கறாராக பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரும், பாஜக எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் தரப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது. இவர்களும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லையாம். இதனால் திருநெல்வேலி அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad