100 பேருக்கு டெஸ்ட் பண்ணா 27 பேருக்கு கொரோனா… கிருஷ்ணகிரியை கட்டம் கட்டிய வைரஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

100 பேருக்கு டெஸ்ட் பண்ணா 27 பேருக்கு கொரோனா… கிருஷ்ணகிரியை கட்டம் கட்டிய வைரஸ்!

100 பேருக்கு டெஸ்ட் பண்ணா 27 பேருக்கு கொரோனா… கிருஷ்ணகிரியை கட்டம் கட்டிய வைரஸ்!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று 923 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அது 944-ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 5,748-ஆக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரியை பொறுத்தவரையில் பரிசோதனை செய்வோரில் 27 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதால் சுகாதாரத்துறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று 3,407 பேரிடம் சோதனை செய்ததில் 923 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதேநேரத்தில், ஒரே நாளில், 244 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 47,726-ஆக உயர்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 53,838 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 364 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியை பொறுத்தவரை கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகுதியாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூலம் கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad