பேஸ்புக் காதலால் பலருக்கு இரையான +1 மாணவி… சினிமாவை விஞ்சும் பரபரப்பு சம்பவம்!
கரூர் அருகே பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் பள்ளி சிறுமியை பலர் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமூக வலைதள நட்பு சில நாட்களில் காதலாக மலர்ந்துள்ளது.
திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் இளைஞர் குமார் பலமுறை உறவு வைத்துள்ளார். இந்த முறையற்ற உறவு விவகாரம் அதே பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து(35) என்பவருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர், இருவரையும் மிரட்டியதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் கூறியுள்ளார் மாரிமுத்து. சிறுமியை மிரட்டி பலமுறை மாரிமுத்து உடலுறவு வைத்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
17 வயது பெண் உள்ளிட்ட மூவர் தற்கொலை… நாமக்கல்லில் நடந்தது என்ன?
பாதிக்கப்பட்ட சிறுமி கரூர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த மாரிமுத்துவை போக்சோ தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், சம்பவத்திற்கு முக்கிய காரணமான திருப்பூரை சேர்ந்த குமார் தலைமறைவாகிவிட்டதால் அவரை பிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதல், முறையற்ற உறவாக மாறிவிட பள்ளி சிறுமியை சினிமா பாணியில் ஒருவர் மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment