புதிய பேருந்து நிலையங்கள் வரவுள்ள 13 ஊர்கள் இதுதான்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 424 கோடி ரூபாய் செலவில் 13 புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
போக்குவரத்து அத்தியாவசிய தேவையாகிவிட்ட நிலையில், தனிநபர் பயன்பாட்டுக்கான கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும், பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் பெருகி கொண்டுதான் வருகின்றன.
இதேபோன்று பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப பேருந்து நிலையங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 424 ரூபாய் மதிப்பீட்டில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சங்கரன்கோவில், திருமங்கலம், மன்னார்குடி, மயிலாடுதுறை, கடலூர், ,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருத்தணி, திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 13 இடங்களில் புதிதாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றின் நிதி உதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment