வனவிலங்கு மரபணு ஆய்வகத்துக்கு எல்லாம் ரெடி.. உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

வனவிலங்கு மரபணு ஆய்வகத்துக்கு எல்லாம் ரெடி.. உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு பதில்!

வனவிலங்கு மரபணு ஆய்வகத்துக்கு எல்லாம் ரெடி.. உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு பதில்!


வனவிலங்குகள் மரபணு ஆய்வகம் அமைப்பதற்கு தயார்நிலையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வனவிலங்குகளின் மரபணு ஆராய்ச்சி தொடர்பான ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் கொள்முதல் செய்து விட்டதாகவும், அறிவியலாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு, விரைவில் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளின் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பிற மாநிலங்களை அணுக வேண்டியுள்ளதால், வனவியல் தடயவியல் ஆய்வகங்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.


அப்போது அவர்கள், ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும், சோதனைகள் நடத்துவதற்கு, தகுதியான அறிவியலாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும், கொரோனா பேரிடர் காரணமாக சற்று தாமதமாவதாகவும், விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad