தடுப்பூசி விலை குறையப்போகுது.. பரபரப்புத் தகவல்!
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இவ்விரு தடுப்பூசிகளும் எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு அனுமதி பெற்று மக்களுக்கு போடப்பட்டன.
இந்நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு வழக்கமான சந்தைக்கான அனுமதியை விரைவில் அரசு வழங்கவுள்ளது. மேலும், இவ்விரு தடுப்பூசிகளுக்கும் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விலை குறையும் என்பது குட் நியூஸ். இதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 275 ரூபாயாகவும், கூடுதல் சேவைக் கட்டணம் 150 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.தடுப்பூசிகளின் விலையை குறைக்கும் வகையில் அதிகபட்ச விலை வரம்பை நிர்ணயிக்கும் பணிகளில் ஏற்கெனவே தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் களமிறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ஒரு டோஸ் கோவாக்சின் விலை 1200 ரூபாயாகவும், கோவிஷீல்டு விலை 780 ரூபாயாகவும் உள்ளது. இதில் 150 ரூபாய் சேவைக் கட்டணமும் அடங்கும். இந்நிலையில் ஒரு டோஸ் விலையை 275 ரூபாய் வரை குறைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment