நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? -தேதியை அறிவித்தது ஆணையம்!
மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார்.
பிப்ரவரி 19: அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மின்னணு இயந்திரங்கள் (இவிஎம்) மூலம் வாக்குப்புதிவு நடைபெறும். மாலை 5 -6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம்.
பிப்ரவரி 22: வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம் தேதி பதவியேற்று கொள்வார்கள்.
வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடையும். பிப்ரவரி 5 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாள் என்று மாநில தேர்தல ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். வாககுப் பதிவு நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment