ராமநாதபுரம் டெண்டர் விடுவதில் ஊழல்..?: துணை தலைவர் பேச்சால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

ராமநாதபுரம் டெண்டர் விடுவதில் ஊழல்..?: துணை தலைவர் பேச்சால் பரபரப்பு!

ராமநாதபுரம் டெண்டர் விடுவதில் ஊழல்..?: துணை தலைவர் பேச்சால் பரபரப்பு!


போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டரில் முறைகேடுகள் உள்ளதாக துணை தலைவர் கூட்டத்தில் சுமத்திய குற்றச்சாட்டு அதிர்வலைகளை கிளப்பி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.


அப்போது கூட்டத்தில் பேசிய ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூமிநாதன், “இந்த ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதேபோல் கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே ஒப்பந்தங்கள் விடப்பட்டு வருகின்றன” என கூறினார்.
மேலும் அவர், “இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே நடந்த கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதை அதிகாரிகள் அலட்சியமாக கண்டுகொள்ளவில்லை” என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் பல கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் மூலமாக வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது முழுமையாக வழங்கப்படவில்லை என முன் வைத்த குற்றச்சாட்டு, கவுன்சில் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


No comments:

Post a Comment

Post Top Ad