யாருக்கெல்லாம் கொரோனா பூஸ்டர் டோஸ்? -நீங்கள் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

யாருக்கெல்லாம் கொரோனா பூஸ்டர் டோஸ்? -நீங்கள் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்!

யாருக்கெல்லாம் கொரோனா பூஸ்டர் டோஸ்? -நீங்கள் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்!



கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கவுள்ள நிலையில், யாருகெல்லாம் இந்த தடூப்பூசி போடப்படவுள்ளது, எந்த வகை தடுப்பூசி எவ்வளவு கால இடைவெளியில் போடப்படவுள்ளது என்பன உள்ளிட்ட பூஸ்டர் டோஸ் குறித்த அடிப்படை தகவல்களை இங்கே பார்ப்போம்.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு மேல் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்துவதற்கான மெகா முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டும் கொரோனாவின் உக்கிரம் குறையாமல், அது ஒமைக்ரானாக உருமாற்றம் அடைந்து மிரட்டி வருவதால், தற்போது பூஸ்டர் டோஸ் போட உலக நாடுகள் முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்கியுள்ளன.

இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று துவங்க உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 35.46 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி மூன்றாவது தவணையான பூஸ்டர் டோஸ் யாருகெல்லாம் போடப்படவுள்ளது, எந்தவகை தடுப்பூசி, எவ்வளவு கால இடைவெளியில் போடப்படவுள்ளது என்பன உள்ளிட்டவை குறித்து இங்க காண்போம்.

பூஸ்டர் டோஸ் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட உள்ளது.

மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டுமை பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.

முதல் மற்றும் இரண்டாவது தவணைகளில் எந்தவகை தடுப்பூசி போடப்பட்டதோ. அதே வகை தடுப்பூசியே பூஸ்டர் டோசிலும் செலுத்தப்படும். அதாவது முன்பு கோவாக்சின் செலுத்தி கொண்டவர்களுக்கு கோவாக்சினும், கோவிஷீல்டு போட்டு கொண்டவர்களுக்கு கோவிஷீல்டும் போடப்படும்.

எனவே ஒண்ணுக்கு, ரெண்டு தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் திரும்பவும் பூஸ்டர் போட சொல்கிறார்களே என பொதுமக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் குறித்து யோசிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தைரியம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad