பள்ளிகளை திறக்க கோரிக்கை: அரசு எடுக்கும் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

பள்ளிகளை திறக்க கோரிக்கை: அரசு எடுக்கும் முடிவு என்ன?

பள்ளிகளை திறக்க கோரிக்கை: அரசு எடுக்கும் முடிவு என்ன?


தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பினர் கேடடுக்கொண்டுள்ளனர்.
தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கை பதிவில் மனு ஒன்றை அளித்துள்ளார்.


மேலும் தமிழ்நாட்டில் கொரோனா குறைய வேண்டும் என்றால் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆறுமுகம் கூறியுள்ளார்.


“கொரோனா, ஒமைக்ரான் தொற்று எவ்வளவு உச்சத்திலிருந்தாலும் - கோவில் பூசாரிகள், அனைத்து மத பக்தர்கள், திருமண வீட்டார், இறப்பு வீட்டார், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியர்கள், சிறு குறு வியாபாரிகள், கட்டிடத் தொழில் முதலாளிகள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை 100% தமிழ்நாடு அரசு கண்காணித்து வருகின்றது.
இந்திய அளவில் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக திகழ வழிவகை செய்துள்ள நிலையில், தனியார் சுயநிதி பள்ளிகளை மட்டும் பழிவாங்கும் நோக்கோடு நடத்துவது ஏன் என புரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு 20 மாதங்களுக்கு பின் பல கடன்களை பெற்றுப் பராமரிப்பு செய்து பள்ளி திறக்க வைத்து உடனடியாக மூடியதாலும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை என்பதால் வீடுகளில், தெருக்களில், குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நடமாடுகின்றனர். விடுமுறை என்பதால் குடும்பத்தோடு சுற்றுலா தளங்களில் கூடுகின்றனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வேண்டும் என்றால் பள்ளிகளைத் திறந்து தீவிர வழிகாட்டுதல்களோடு நடத்தினால், பொது இடங்களில் கூட்டம் குறைந்து தொற்று குறைய வாய்ப்பு ஏற்படும்.

பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு வாரத்தில் 2 நாட்கள் கூட மாணவர்களை வரவைக்கலாம். ஒரு வகுப்பில் 10 மாணவர்களைக் கூட அமர வைக்கலாம். ஆனால், பள்ளிகளை மொத்தமாக மூடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்தே ஆக வேண்டும்.

அரசின் சமீபத்திய இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வ ஆசிரியர்கள் செயல்படும் அதே நடைமுறையைப் பின்பற்றி, ஒரு பள்ளியில் ஒரு நேரத்தில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்களுக்கு அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.

இல்லம் தேடி கல்வியில் உள்ள தன்னார்வ ஆசிரியர்கள் பின்பற்றும் அதே நடைமுறைகளையே தனியார் பள்ளிகளாகிய நாங்களும் பின்பற்ற உள்ளோம். இல்லம் தேடி கல்வி நடத்த அனுமதி உள்ளபோது எங்களது இந்த நடைமுறைக்கும் எவ்வித சட்டச் சிக்கலும் இருக்காது என்றே கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad