மீன் தரமில்லை லஞ்சம் கொடு, தேனி அதிகாரி அட்டூழியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

மீன் தரமில்லை லஞ்சம் கொடு, தேனி அதிகாரி அட்டூழியம்!

மீன் தரமில்லை லஞ்சம் கொடு, தேனி அதிகாரி அட்டூழியம்!



தேனியில் லஞ்சம் வாங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் கைது. மீன் வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை.
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக பின்புறம் மீன் கடை நடத்தி வருபவர் திருமலை பால்பாண்டி. இவரது மீன் கடையில் கடந்த வாரம் ஆய்வு செய்த தேனி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் சண்முகம், அங்கு தரமற்ற மீன்களை விற்பனை செய்வதாகவும், அதற்கு அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டும் என்றால், தனக்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாக தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தான் தரமான மீன்களை விற்பனை செய்வதாகவும், வேண்டும் என்றே தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கோடு லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக தேனி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் திருமலை பால்பாண்டி புகார் அளித்தார்.

அதனடிப்படையில் ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாயை திருமலை பாண்டியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பி வைத்தனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் அலுவலகத்தில் திருமலை பாண்டியிடம் பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சண்முகம் பிடிபட்டார்.

பின்னர் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கருப்பையா தலைமையிலான போலீசார் சண்முகத்திடம் விசாரணை நடத்தினர். சுமார் 5மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து அழைத்துச்
சென்றனர்.

மீன் வியாபாரியிடம் லஞ்சப் பணம் பெற்ற உணவுப் பாதுகாப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad