வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா!
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னிடம் அண்மையில் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த சுமார் ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் பரவியது. இதில் ஏராளமான அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பல பிரபலங்களுக்கும் வரிசையாக கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா மூன்றாம் அலையின் வேகம் உணர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் அண்மையில் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. எனினும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி இன்று ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment