ஊரடங்கு - உணவு டெலிவரிக்கு அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

ஊரடங்கு - உணவு டெலிவரிக்கு அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு!

ஊரடங்கு - உணவு டெலிவரிக்கு அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு!


ஊரடங்கின்போது உணவு டெலிவரி செய்ய உணவகங்களுக்கு தமிழக அரசு அனுமதி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 10908 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இதர நாட்களில் இரவு ஊரடங்கு, தினமும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதில், திருமணங்களுக்கு செல்வோருக்கு ஊரடங்கு நேரத்தில் அனுமதியளிக்கப்படும் என ஏற்கெனவே அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உணவகங்கள் உணவு டெலிவரி செய்வதற்கும் அனுமதியளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழகத்தில் நாளை (9-1-2022) அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும்.

இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad