யுவனிடம் அனுமதியெல்லாம் கேட்க மாட்டேன்: நடிகர் விஷால்!
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனக்கு நெருங்கிய நண்பர் என தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
'எனிமி' படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே 'வீரமே வாகை சூடும்' படத்தை தொடங்கினார் விஷால். து.பா.சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. புது இயக்குனரிடம் நல்ல கதையை கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இதற்காக யுவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன். கட்டாயமாக சொல்லிவிடுவேன். ஏன் என்றால் யுவன் எனக்கு நெருங்கிய நண்பர்
.நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை; கோவில். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன் இவ்வாறு தெரிவித்துள்ளார் விஷால்.
No comments:
Post a Comment