தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதியுமா? எல்லாத்துக்கும் இதுதான் காரணம்..!
விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகும் மும்பைக்கார் படம் OTT யில் வெளியாகிறது
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தை நாம் விரல் விட்டு என்ன முடியாது. அந்த அளவிற்கு படு பிஸியாக பல படங்களில் நடித்துவருகிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் படத்திலும் நடிக்கின்றார் விஜய் சேதுபதி. தமிழை தவிர மற்ற மொழி படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் திரைப்படம் மும்பைக்கார்.
தமிழில் 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக் தான் இந்த மும்பைக்கார்.புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பெல்லாம் முடிந்து வெளியீட்டிற்கு இப்படம் தயாராகவுள்ளது. இந்நிலையில் இப்படம் OTTயில் நேரடியாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
முதலில் இப்படத்தை திரையரங்கில் வெளியிடத்தான் முடிசெய்ததாம் படக்குழு. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் திரையரங்கிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திரையரங்கில் படத்தை வெயிட்டால் சரிவராது என்று எண்ணிய படக்குழு மும்பைக்கார் படத்தை OTTயில் நேரடியாக வெளியிட முடிவுசெய்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. மேலும் விஜய் சேதுபதியின் படங்கள் சமீபத்தில் தொடர்ந்து OTT யில் வெளியாவது ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரணசிங்கம், அனபெல்லா சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் அடுத்தடுத்து OTT யில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி ஹிந்தியில் அறிமுகமாகும் மும்பைக்கார் படமும் OTTயில் வெளியாவதால் ரசிங்கர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment