94 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சாதனை படைத்த முதியவர்...
94 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சாதனை படைத்தவர் குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
நீங்கள் இதுவரை தேர்தலில் தோல்வியையே சந்திக்காத தலைவர்களை பார்த்திருப்பீர்கள். பல தலைவர்கள் அதிகமாக தேர்தலில் தொடர் வெற்றியை பெற்று சாதனைகள் கூட படைத்திருப்பார்கள். ஆனால் தேர்தலில் தோற்று சாதனை படைத்த நபரை பற்றி உங்களுக்கு தெரியுமா?
டில்லி ஆக்ராவைச் சேர்ந்த ஹஸ்னூராம் அம்பேத்கர் என்பவர் இதுவரை 94 முறை தேர்தலில் தோல்வியடைந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உ.பி தேர்தலிலும் போட்டியிடுகிறார். இவர் தன் வாழ்வில் பலதேர்தல்களில் போட்டியிருந்தாலும் எதிலுமே வெற்றி பெற்றதில்லை. இவர் 100 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடுகிறார்.
1985ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை நடந்த பல பெரிய மற்றும் சிறிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இவருக்கு எந்த கட்சியும் இதுவரை சீட் வழங்கியதில்லை. சுயேட்சையாக மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதற்கு காரணம் 1985ல் இவர் ஒரு கட்சியில் சீட் கேட்ட போது இவருக்கு 1 ஓட்டு கூட விழாது என அவமானப்படுத்தியுள்ளனர். அன்று முதல் தான் இனி எல்லா தேர்தல்களிலும் சுயேட்சையாக நிற்பேன் என இவர் களம் இறங்கியுள்ளார். இவர் வார்டு கவுன்சிலர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இவரை பற்றிய உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment