பொங்கல் பரிசில் தில்லாலங்கடி; போட்டுக்கொடுத்த பொதுமக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

பொங்கல் பரிசில் தில்லாலங்கடி; போட்டுக்கொடுத்த பொதுமக்கள்!

பொங்கல் பரிசில் தில்லாலங்கடி; போட்டுக்கொடுத்த பொதுமக்கள்!


கடமைக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் அதிகாரிகள் செய்த நூதன மோசடியை பொதுமக்கள் போட்டுக்கொடுத்து உள்ளனர்.
தைப்பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில் 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பெண்களுக்கான கபடி போட்டி; கு பிச்சாண்டி துவக்கி வைப்பு!


அதன்படி தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்திற்காக 1,088 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் 21 பொருட்களில் ஒருசில பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பொருட்களின் எடையும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏலக்காய், முந்திரி போன்ற பொருட்களின் எடை சரியாக இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


மேலும், 21 பொருட்களுக்கு மாறாக 18 பொருட்களே உள்ளதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களில் வண்டு இருப்பதாகவும், வெல்லம் தரமானதாக இல்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் முந்திரி, ஏலக்காய், திராட்சை பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் இருக்க வேண்டும்.
பாட்டியின் கள்ளம் கபடமற்ற பேச்சு ; கொஞ்சி மகிழ்ந்த கேரள தம்பதியர்!

ஆனால் முந்திரி வெறும் 10 கிராம், திராட்சை 15 கிராம், ஏலக்காய் 2 கிராம் தான் இருக்கிறது. இதனால் பொங்கல் தொகுப்பு வாங்கிய பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

பொங்கல் பரிசு பொருட்கள் எடை குறைவு, பாக்கெட் உடைப்பு போன்ற குறைகள் இருப்பதால் மக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையில் ஆங்காங்கே பிரச்சனை எழுகிறது.

இந்த மாதிரியான தகராறுகளை குறைப்பதற்காக அரசு வழங்கும் 21 வகையான பொங்கல் பரிசு பொருட்கள் எந்த குறைபாடும் இல்லாமல் ரேஷன் கடைகளுக்கு விநியோக்கிப்பட்டால் எந்த மனக்கசப்பும் வராது என பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்கும்பொழுது வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து குழுக்கள் அமைத்து எடை குறைவாக வழங்கப்படும் கடைகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தார்.




No comments:

Post a Comment

Post Top Ad