வசமாக சிக்கிய பாஜக; தமிழ் மண்ணில் ஆட்டம் குளோஸ் - ஜோதிமணி அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

வசமாக சிக்கிய பாஜக; தமிழ் மண்ணில் ஆட்டம் குளோஸ் - ஜோதிமணி அதிரடி!

வசமாக சிக்கிய பாஜக; தமிழ் மண்ணில் ஆட்டம் குளோஸ் - ஜோதிமணி அதிரடி!


பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் உடனான கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நம் அனைவரின் இலக்கும் நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைப்பது தான். தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது அனைவரும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

நீட் தேர்விற்கு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது பாஜக சார்பில் பேசிய வானதி சீனிவாசன், தமிழ்நாட்டின் நீட் தேர்விற்கு விலக்கு கோரி அனைத்து கட்சிகள் சார்பில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நிறைவேற்றிட உடன்பாடில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

இறுதியாக, நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட மூத்த சட்ட வல்லுநர்கள் உடன் கலந்தாலோசித்து, பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து மேற்கொள்ளும். இந்த தேர்வின் பாதகங்களை மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டரில், நீட்டுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கும் போது பாஜக மட்டும் நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் என்றும், இந்த பொது நுழைவுத்தேர்வு தேவை என உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் என்றும் சமூக வலைதளவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad