மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மீண்டும் ஆன்லைனில் தேர்வு!
ஆன்லைன் மூலம் அலகுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கொரோனா பரவல் காரணமாக திருப்புதல் தோவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆன்லைன் மூலம் அலகுத் தோவுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்லூரி மாணவர்களுக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேவேளையில் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று (ஜனவரி 19ஆம் தேதி) முதல் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் பின்னா் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு அவா்களுக்கு இணைய வழியில் அந்தந்தப் பாடங்களுக்கான அலகுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
“அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து நேரடியாக தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இருப்பினும் மாணவா்கள் தேர்வுக்குத் தயாராகி உள்ளனா். எனவே அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியா்கள் மூலமாக ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி வினாத்தாள் தயாா் செய்து மாணவா்களின் 'வாட்ஸ்-ஆப்' எண்ணுக்கு அனுப்பி, மாணவா்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதிய பின் வினாத்தாளை மாணவா்கள் மீண்டும் வாட்ஸ் ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை ஆசிரியா்கள் மதிப்பீடு செய்வா். இதனால் மாணவா்களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும்” என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment