ராமர் ஏன் குடிசையில் தங்கினார்?.. அகிலேஷிடம் கேளுங்கள்.. அயோத்தியில் முழங்கிய அமித் ஷா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

ராமர் ஏன் குடிசையில் தங்கினார்?.. அகிலேஷிடம் கேளுங்கள்.. அயோத்தியில் முழங்கிய அமித் ஷா!


ராமர் ஏன் குடிசையில் தங்கினார்?.. அகிலேஷிடம் கேளுங்கள்.. அயோத்தியில் முழங்கிய அமித் ஷா!


ராமரை ஏன் குடிசையில் தங்க வைத்தீர்கள் என்று அனைவரும் அகிலேஷ் யாதவிடம் கேட்க வேண்டும் என்று அமித் ஷா பேச்சு.

அயோத்தியில் கர்சேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என்று அகிலேஷ் யாதவிடம் அனைவரும் கேட்க வேண்டும். ராமர் ஏன் குடிசையில் தங்க வைக்கப்பட்டார் என்று அகிலேஷ் யாதவ் விளக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச தேர்தலையொட்டி அயோத்தியில் பாஜக சார்பில் மக்கள் நம்பிக்கை யாத்திரை என்ற பெயரில் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். அப்போது அவர் பேசுகையில், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி அரசுகள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்திய கட்சிகள் ஆகும்.

அயோத்தியில் கர சேவகர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களது உடல்களை சரயு நதியில் வீசினர். கர சேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என்று அகிலேஷ் யாதவிடம் நீங்கள் கேட்க வேண்டும். நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள்தான் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகள்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மக்களின் ஒவ்வொரு நம்பிக்கையையும் மதித்து உழைத்து நடக்கின்றனர். அகிலேஷ் யாதவ் இங்கே வந்தால் விடாதீர்கள்.. கேள்வி கேளுங்கள்.. கர சேவகர்கள் செய்த குற்றம் என்ன என்று கேளுங்கள். ஏன் அரசு அவர்களை முதலில் சுட்டது என்று கேளுங்கள். சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை என்று கேளுங்கள்.

ஏன் ராமரை சின்னக் குடிசையில் பல ஆண்டுகள் தங்க வைத்தீர்கள்? இன்று அயோத்தியில் ராமர் அவதரித்த அதே இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்டக் கோவிலை எழுப்புகிறார். இன்னும் சில மாதங்களில் அந்தக் கோவில் உருவாகி விடும். இந்தக் கோவிலை வர விடாமல் தடுத்தவர்கள் சமாஜ்வாடி கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் என்றார் அமித் ஷா.

No comments:

Post a Comment

Post Top Ad