ராஜேந்திர பாலாஜி வழக்கில் புது ட்விஸ்ட்; புகார் கொடுத்தவர் கைது!
முன்னாள் அமைச்சருக்கு எதிராக புகார் அளித்தவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார். பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கர்நாடகாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று ராஜேந்திர பாலாஜி வெளியே வந்துள்ளார்.
முன்னதாக அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி அளித்த புகாரின் அடிப்படையிலேயே ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் விஜய நல்லதம்பி மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதாவது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஒருமாதமாக விஜய நல்லதம்பி தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதையடுத்து விருதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment