நெல்லை தல பொங்கல்; புதுமண தம்பதிகளுக்கு விருந்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 15, 2022

நெல்லை தல பொங்கல்; புதுமண தம்பதிகளுக்கு விருந்து!

நெல்லை தல பொங்கல்; புதுமண தம்பதிகளுக்கு விருந்து!



நெல்லையின் பாரம்பரிய தல பொங்கல் விழாவை ஸ்டைல் மாறாமல் புதுமண தம்பதிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் அதிகாலையிலேயே உற்சாகமாக பொங்கல் பண்டிகையை தொடங்கி விட்டனர்.
குறிப்பாக நெல்லை உடையார்பட்டி பகுதி காமாட்சி அம்மன் கோவில் தெரு முழுக்க வீட்டு வாசல்களில் மக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதற்காக தெருவெங்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலங்கள் இட்டு வீடுகளை மணம் வீசும் மலர்களால் அலங்கரித்து தயார் செய்து இருந்தார்கள்.

இதில் குறிப்பாக திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன ஆனந்த் மற்றும் திவ்ய லட்சுமி தம்பதியினர் தங்களது தல பொங்கலை அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருவிழாவில் புதுமணத் தம்பதிகள் தல பொங்கல் கொண்டாடும் நிகழ்வுக்காக மணமகள் வீட்டில் இருந்து சீர்வரிசை பொருட்கள் மணமகன் வீட்டுக்கு ஒரு வாரம் முன்பாகவே கொண்டு வரப்பட்டு இருந்தது.

நெல்லை உடையார்பட்டியில் மணமகன் வீட்டில் வாசல் நிறைத்து வரையப்பட்டிருந்த வண்ணக்கோலம் மீதாக அடுப்புக் கட்டிகளை அடுக்கி அதன் மீது மஞ்சள் குலை சூடிய புதுப்பித்தளை பானையை வைத்து பொங்கல் வைத்தனர்.
புதுமண தம்பதிகள் இதுவரை தங்கள் தனித்திருந்து கொண்டாடிய பொங்கல் இன்று கணவன், மனைவியாய் ஒன்று சேர்ந்து, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பொங்கல் பானையில் பால் பொங்கி வழிய ஏற்கனவே களைந்து வைத்து எடுத்து இருந்த சம்பா பச்சரிசி போட்டு குலவையிட்டு பொங்கிய பொங்கலை கதிரவனுக்கு படைத்து இயற்கையை வணங்கி கொண்டாடினர்.





No comments:

Post a Comment

Post Top Ad