நடிகர் சந்தானத்தின் அடுத்த சம்பவம்..மீண்டும் இணையும் கூட்டணி ?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணையவுள்ளார் நடிகர் சந்தானம்
நகைச்சுவை நடிகராக வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருந்த சந்தானம் திடீரென ஹீரோ அவதாராம் எடுத்தார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து காமெடியனாக வெற்றிக்கொடி நாட்டி பின்பு ஹீரோவாக முன்னேறினார். இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் இனிமே ஹீரோதான் என தன் படத்தின் டைட்டிலின் மூலமே தெரியப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து தில்லுக்கு துட்டு, சக்கைபோடுபோடு ராஜா, A1 ,டகால்ட்டி, தில்லுக்கு துட்டு 2, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் OTT யில் டிக்கிலோனா மற்றும் திரையில் சபாபதி ஆகிய படங்கள் வெளிவந்தன.
ந்நிலையில் தற்போது இவரின் அடுத்த படத்தைப்பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகியுடன் மீண்டும் ஒரு படத்தில் சந்தானம் இணையவிருக்கிறாராம்.
மாநகரம், உறுமீன், பலூன் போன்ற படங்களில் வசனங்கள் எழுதிய கார்த்திக் யோகி இயக்கிய முதல் படம் டிக்கிலோனா. யுவன் ஷங்கர் ராஜா இசையில் காமெடி படமாக உருவான இப்படம் OTT யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் மேலும் ஒரு படம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment