ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து; அதிரடியாக வந்தது கோரிக்கை!
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை பொதுமக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வர்த்தக சங்கம், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள் உரிமையாளர்கள் ஆசோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஞாயிறு ஊரடங்கினால் முன்தினம் வரும் சனிக்கிழமை, அதனை தொடர்ந்து திங்கள் கிழமையும் பொருட்கள் வாங்கும் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரானா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்து உள்ளது.
சிவகங்கை மஞ்சு விரட்டு; 65 பேர் காயம்!
பொங்கல் பண்டிகையினையொட்டி வரும் இரண்டு ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஊரடங்கை ரத்து செய்வதற்கு தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.
ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களின் இலைகள் உள்ளிட்ட கழிவுகளை அவர்களே மக்கும் குப்பைகள் ஆக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதை ஹோட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள், கோழி கடை, சிறு உணவக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதேபோல் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழித்து மாநிலத்திற்கு முன்னோடியாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வர்த்தக சங்க மாநில துணை தலைவர் ஞானசேகரன், தலைவர் ஆர்.வி.ஆனந்த், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், திருமண மண்டபம், ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment