Dhanush: தனுஷ் 'ஆசை' இனி ஜென்மத்துக்கும் நிறைவேறாது
விவாகரத்து செய்தியை பார்த்த ரஜினி ரசிகர்களோ, தனுஷின் ஆசை இனி ஜென்மத்துக்கும் நிறைவேறாது என தெரிவித்துள்ளனர்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனுஷை அன்ஃபாலோ செய்து வருகிறார்கள்.
தன் தலைவரான ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும். இல்லை அவருடன் சேர்ந்து ஒரேயொரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்டகால ஆசை.
ரஜினியின் காலா படத்தை தனுஷ் தான் தயாரித்தார். அப்பொழுது கூட அதில் ஒரு காட்சியில் அவரால் நடிக்க முடியாமல் போனது. தலைவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது என்று தனுஷ் பல முறை தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தலைவர் 170 படத்தை தனுஷ் இயக்குவார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் விவாகரத்து அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்களோ, அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா என தெரிவித்துள்ளனர்.தலைவர் 170 படத்தை தனுஷ் இயக்க, மகள்கள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பார்கள். அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ரஜினி என்று முன்பு தகவல் வெளியானது.
அண்மையில் நடந்த தேசிய விருது விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. இருவரும் தங்கள் பதக்கங்களுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள். அப்படி சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் யார் கும்மியடித்தது என்றே தெரியவில்லை என தனுஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்புகிறார்கள்.
No comments:
Post a Comment