அரசு பள்ளி லேப் மாடியில் இருந்து குதித்த +1 மாணவி!
தென்காசி அருகே அரசு பள்ளி மாணவி பள்ளி கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி லிங்கம் என்பவரது மகள் பொன்னரசி(17). இவர், பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 கணினி அறிவியல் துறையில் படித்து வந்தார்.
கடந்த 3-ம் தேதி மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி லேப் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து பொன்னரசி கீழே குதித்தார். அவரை மீட்ட சக மாணவவிகள் மற்றும் ஆசிரியர்கள் தென்காசி
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர நோயாளிகளுக்கான பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment