10, 12 வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு செம ஷாக்!
மாநில பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ படிப்புகளில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதால், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில்
வகுப்பெடுத்து விட்டு நேரடி தேர்வுகள் நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என மாநில அரசுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், அனுபா ஸ்ரீவஸ்தா என்பவர் 10,12 ஆம் வகுப்புகளுக்கு மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்டவைகள் நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், 10,12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.மேலும், இத்தகைய மனுக்கள் மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் கண்டித்த நீதிமன்றம், எதிர்காலத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment