இறுகும் பிடி: மார்ச் 11இல் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

இறுகும் பிடி: மார்ச் 11இல் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவு!

இறுகும் பிடி: மார்ச் 11இல் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவு!


சிறையில் சொகுசு வசதிகளைப் பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராக சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா காலமானதால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து அனைவரும் வெளியே வந்து விட்டனர்.
முன்னதாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் போது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள் சிலர் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார். சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று திரும்பும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, சசிகலா சிறையில் இருந்த போது, அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என அறிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யஅதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 2ஆம் தேதி

இந்த நிலையில், ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 11‍ஆம் தேதி நேரில் ஆஜராகக்கோரி, சசிகலா, இளவரசி உள்ளிட்ட ஆறு பேருக்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.ப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad