ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்!
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்று கொண்டு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது சேவியர் மற்றும் ஜரோமீயஸ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகில் இருந்த மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை , படகில் இருந்த மீனவர்கள் சேவியர் ராஜா, ஆரோக்கியதாஸ், ஜேம்ஸ், ரஞ்சித், ராமன், முனீஸ்வரன், முத்தா, மற்றும் ஜெரெமியஹ், என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ஜெரெமியஹ் பாதாளம், நெப்போலியன் உள்ளிட்ட 12 மீனவர்களை கைது செய்தனர்.
அதோடு இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து சென்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 3 விசைப்பலகையும் 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த நேற்று முன்தினம் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்பலகையின் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment