காவல்துறை காட்டிய ஆக்ஷன்; மதுரையில் 15 கிலோ குட்கா பறிமுதல்!
மதுரையில் 15 கிலோ குட்காவை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மதுரையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ குட்காவை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் குட்கா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் குட்கா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட தனிப்படையினர் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உசிலம்பட்டி டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஏரியாவில் மாவட்ட காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இதை பதுக்கி வைத்திருந்த அய்யர் என்ற நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து அய்யர் என்பவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் சுமார் 15 கிலோ பறிமுதல் செய்து. இதனையடுத்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அவரை உட்படுத்தினார்.
மேலும், இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்கள். 15 கிலோ குட்கா சிக்கியுள்ளதால் மதுரை மாவட்ட உசிலம்பட்டியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment